THIRUVEMBAVAI திருவெம்பாவை

இந்த உலகைப் படைத்துக் காக்க சிவனில் நவசக்திகள் தோன்றி செயல்படுவதை திருவெம்பாவையின் பாடல்கள் உணர்த்துகின்றன.ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதியை போற்றி மாணிக்க வாசகர் பாடிய திருவெம்பாவையும், திருப்பள்ளியெழுச்சியையும் படித்து மகிழுங்கள்.

Sunday, January 13, 2008

ஆரமுதே பள்ளியெழுந்தருள்திருசிற்றம்பலம்

திருப்பள்ளியெழுச்சி # 10
" புவனியிற் போய்ப்பிற வாமையின் நாள்நாம்

போக்குகின்றோம் அவமே இந்தப்பூமி
சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று " நோக்கித்
திருப்பெருந் துறையுறை வாய்! திருமாலாம்
அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்
படவும்நின் அலர்ந்தமெய்க் கருணையும் நீயும்
அவனியிற் புகுந்தெம்மை ஆட்கொள்ள வல்லாய்;
ஆரமு தே; பள்ளி எழுந்தருளாயே.........(10)


பொருள்:திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே! எங்கும் நிறைந்த அமுதமே! எம்பெருமானே! நீவிர் உயிர்களுக்கெல்லாம் ஈடேற்றம் வழங்கி ஏற்றுக் கொள்வது, இந்த மண்ணுலகத்தின் வழியாகவே என்னும் உண்மையை உணர்ந்த திருமாலும் நான்முகனும், தாங்களும் இந்த மண்ணுலகத்தில் போய் பிறக்காததால் வாழ்நாளையெல்லாம் வீணாகக் கழிக்கின்றோம் என்று ஏங்குகின்றனர்.

இப்படி திருமால் விரும்பும்படியும், நான்முகன் ஆசைப்படும்படியாகவும் உன் மலர்ந்த மெய்க் கருணையும் நீயுமாக இம்மண்ணுலகத்திற்கு வந்து எங்களை ஆட்கொள்ள வல்லவனே!  அன்பர்களுக்கு தெவிட்டாத ஆரமுதமானவனே! பள்ளியிலிருந்து எழுந்தருள்வாயாக!

திருசிற்றம்பலம்

திருப்பள்ளியெழுச்சி முற்றியது


குறையேதும் இருந்தால் அது அடியேனுடையது நிறைகள் அனைத்தும் மாணிக்கவாசகரின் திருவடிகளில் சமர்ப்பணம்.

Labels: , , ,

16 Comments:

 • At 11:37 PM , Blogger வடுவூர் குமார் said...

  எங்களை படிக்க வைத்ததற்கு மிக்க நன்றி.

   
 • At 6:15 AM , Blogger Kailashi said...

  தினமும் வந்து படித்து பின்னூட்டங்களும் இட்டு உற்சாகப் படுத்தியதற்கு நன்றி.

  சிறு வயதில் பாராயணம் செய்ய ஆரம்பித்ததால் ஒரு ஈர்ப்பு திருப்பாவை மற்றும் திருவெம்பாவை மீது எனவே தான் இந்த பதிவுகள்.

   
 • At 1:32 AM , Blogger Mouse e Teclado said...

  Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my blog, it is about the Teclado e Mouse, I hope you enjoy. The address is http://mouse-e-teclado.blogspot.com. A hug.

   
 • At 4:37 AM , Blogger Vijay said...

  தமிழ் வலைப் பதிவுலக

  சான்றோர்களுக்கும்,
  பெரியோர்களுக்கும்,
  அறிஞர்களுக்கும்,
  சகோதரர்களுக்கும்,
  சகோதரிகளுக்கும்,
  நண்பர்களுக்கும்,
  தோழர்களுக்கு,
  தோழியர்களுக்கும்

  என் பணிவு கல்ந்த வணக்கங்கள்.

  புகைப்பேழையில் படம் பிடித்த புகைப்டங்களை பதிந்து வந்த என்னை செய்தியுடன் பதிவு செய்ய அறிவுறுத்திய

  டோண்டு ராகவன் ஐயா அவர்களுக்கு என் முதல் நன்றி.

  எனது அன்பு அழைப்பை ஏற்று
  வருகை புரிந்து
  வாழ்த்துரை வழங்கியும்,
  மேம்படுத்த ஆலோசனகள் தந்தும்
  பேருதவி புரிந்திட்ட

  அன்புகளுமிய அன்பர்கள்

  திருநெல்வேலி கார்த்திக்
  அதிஷா
  VSK
  dondu(#11168674346665545885)
  லக்கிலுக்
  ajay
  துளசி கோபால்
  உண்மைத் தமிழன்(15270788164745573644
  VIKNESHWARAN
  சின்ன அம்மிணி
  VIKNESHWARAN
  ஜமாலன்
  உறையூர்காரன்
  மதுரையம்பதி
  கிரி
  ambi
  ஜீவி
  வடுவூர் குமார்
  செந்தில்
  SP.VR. SUBBIAH
  தமிழரசன்
  cheena (சீனா)
  சிறில் அலெக்ஸ்
  வால்பையன்
  வெட்டிப்பயல்
  பினாத்தல் சுரேஷ்
  இலவசக்கொத்தனார்
  அகரம்.அமுதா
  குசும்பன்
  கயல்விழி முத்துலெட்சுமி
  சென்ஷி
  தருமி
  தமிழன்
  செந்தில்
  மனதின் ஓசை
  கானா பிரபா
  Kailashi
  மாதங்கி
  முகவை மைந்தன்

  அனைவருக்கும்
  நெஞ்சுநிறை
  நன்றிகள்
  கோடான கோடி

  என்றும் உங்கள்
  விஜய்
  கோவை.

  http://pugaippezhai.blogspot.com

   
 • At 8:21 PM , Blogger Hindu Marriages In India said...

  மிகவும் அருமை

   
 • At 6:21 AM , Blogger SRIRAM said...

  Dear Shri Kailashi - Your blog is excellent and highly informative. I was refreshing my Thiruvempavai in order to teach my daughter, and stumbled across your blog. The photos of SIVAPERUMAN posted are rare gems.

  Perhaps you can extend this service to Thevaram as well - Kolaru Pathigam, Namachivaya Padhigam, Thiruneetru Padhigam.

  Thanks and Regards - Sriram.

   
 • At 7:05 AM , Blogger Kailashi said...

  Dear Sriram,

  Thank you very much for your encouragement, when time permits I will post pathikams also.

  OM Namashivaya

   
 • At 2:26 AM , Blogger hayyram said...

  gud pics

  regards
  ram

  www.hayyram.blogspot.com

   
 • At 4:15 AM , Blogger Kailashi said...

  Thank you very much.

   
 • At 6:13 PM , Blogger hayyram said...

  gud post
  thanks

  regards
  www.hayyram.blogspot.com

   
 • At 7:17 PM , Blogger N.D. NATARAJA DEEKSHIDHAR said...

  கைலாஷி,
  கருவேலங்குளம் பற்றி பேசவேண்டுமே? தொடர்பு கொள்ளங்கள் 94434 79572. அங்கு செல்ல மிக ஆவலாக இருக்கின்ரேன். நன்றி.
  நி.த. நடராஜ தீக்ஷிதர்
  yanthralaya@yahoo.co.in
  www.natarajadeekshidhar.blogspot.com

   
 • At 12:23 AM , Blogger Bogy.in said...

  புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
  உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
  ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

  தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

  இவன்
  http://www.bogy.in

   
 • At 2:15 AM , Blogger www.bogy.in said...

  தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

  அன்புடன்
  www.bogy.in

   
 • At 2:17 AM , Blogger www.bogy.in said...

  தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

  அன்புடன்
  www.bogy.in

   
 • At 2:16 PM , Blogger ANGOOR said...

  ஒரு அருமையான வலைத்தளம் கண்டு இன்பம் அடைந்தேன். தங்களின் சிவ பணி தொடர என் வாழ்த்துக்கள் …நன்றி
  அன்புடன்
  வேல்தர்மா
  ஜெர்மனி

  தேவாரம்,திருவாசகம்,திருமுறை பாடல்கள், திருவெம்பாவை , திருப்பள்ளியெழுச்சி முழுவதும் இணையத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய
  முகவரி:
  http://www.devarathirumurai.wordpress.com

  http://www.devarathirumurai.blogspot.com

  தேவாரம்,திருவாசகம்,திருவெம்பாவை , திருப்பள்ளியெழுச்சி மற்றும் திருமுறைகளை இலவசமாக இணையத்தில் பதிவிறக்கம் செய்யலாம், சுமார் 5 GB அளவு பாடல்கள் உள்ளன , மேலும் 63 நாயன்மார்களின் வாழ்கை வரலாறு சித்திர வீடியோ (கார்ட்டூன்) வடிவில் உள்ளது.

   
 • At 4:35 AM , Blogger Kailashi said...

  நன்றி ANGOOR

   

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home